முகப்பு
செய்திகள்

தக் லைஃப் படத்தில் அருண் விஜய்?

நடிகர் அருண் விஜய் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்.

Updated On : 31 மார்ச் 2024, 4:02 pm IST
பகிர்:

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது. இதில், த்ரிஷா, கமல்ஹாசன் காட்சிகள் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நடிகர் துல்கர் சல்மான் தன் அடுத்தடுத்த பட வேலைகளில் தீவிரம் காட்டி வருவதால், தக் லைஃப் படத்திலிருந்து விலகினார். துல்கர் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.

தற்போது, இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவியும் விலகியதாகவும் அவருக்கு பதில் நடிகர் அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.