மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!
மொரீஷியஸில் இருக்கும் இளையராஜாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.
இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தையும் பெறுகின்றன. சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்திலும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலைப் பயன்படுத்தி பெரிய வெற்றியைப் பெற்றனர்.
இதனிடையே, கூலி டீசரில் தன் இசை பயன்படுத்தப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது விமர்சனத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கோடையை கொண்டாடுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா மொரீஷியஸ் தீவுக்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் இளையராஜா வெளியிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.