ஸ்டார் ஓடிடியில் எப்போது?
கவினின் ஸ்டார் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான கவின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.
இதனைத் தொடர்ந்து, டாடா படத்தின் மூலம் கவின் பிரபலமடைந்தார். தற்போது, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவான ‘ஸ்டார்’ படத்தில் நடித்துள்ளார்.
இப்படம், கடந்த மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது
Advertisement
Advertisement
ஸ்டார் திரைப்படம் முதல் மூன்று நாள்கள் முடிவில் உலகளவில் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், ஸ்டார் திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.