கார்த்தி 27-வது படத்தின் பெயர் அறிவிப்பு!
நடிகர் கார்த்தியின் 27-வது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார். இது, கார்த்தியின் 27-வது படமாகும்.
2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கடந்த பிப்ரவரியில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தின் பெயர் 'மெய்யழகன்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெய்யழகன் படத்தின் அடுத்த முக்கிய அறிவிப்பு இன்று(மே 23) இரவு 7 மணிக்கு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.