கமல்ஹாசனுடன் த்ரிஷா! தக் லைஃப் அப்டேட்!
தக் லைஃப் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசனுடன் த்ரிஷா எடுத்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் உருவாகி வருகிற தக் லைஃப் படத்தில் சமீபத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
தக் லைஃப் படத்தின் தல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது சென்னையில் பிரமாண்டமாக பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது.
Advertisement
Advertisement
இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் நடிகர் கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பிருந்தா மாஸ்டருடன் த்ரிஷா நடன பயிற்சியமைக்கும் புகைப்படங்கள் வைரலானது.
கமல்ஹாசன் புகைப்படத்தினைப் பகிர்ந்த த்ரிஷா, “மனதுக்கு நல்லது நடக்கும்படியான, தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும், தன்னம்பிகையூட்டும்படியான மக்களுடன் சுற்றி இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
நடிகை த்ரிஷா ஏற்கனவே கமலுடன் மன்மதன் அம்பு, தூங்கா வனம் படத்தில் நடித்துள்ளார்.