நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன். 
செய்திகள்

அமரனால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி!

அமரன் திரையரங்க வணிகம் குறித்து...

DIN

அமரன் திரைப்படம் திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரிய வணிகத்தைக் கொடுத்துள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் பல தரப்பினரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் துவங்கி நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, அரசியல்வாதிகள் சீமான், பாஜக தலைவர் அண்ணாமலை என பிரபலங்கள் பலரும் படத்தை பெரிதாகக் குறிப்பிட்டு வருகின்றனர். ரசிகர்களிடம் உணர்ச்சிகரமான வெற்றியையும் பெற்றுள்ளது. உலகளவில் ரூ. 200 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

முக்கியமாக, படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகவும் லாபகரமான படமாகவே இருந்திருக்கிறது.

பல ஊர்களிலும் சில காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகி வருவதால், டிக்கெட் விற்பனையுடன் தியேட்டர் உணவுப்பொருள் விற்பனையும் இணைந்துள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT