FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தசரா பட இயக்குநருடன் மீண்டும் நானி..! படத் தலைப்பு அறிவிப்பு!

பிரபல தெலுங்கு நடிகர் நானியின் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 நவம்பர் 2024, 1:01 pm IST
தசரா பட இயக்குநருடன் மீண்டும் நானி
பகிர்:

பிரபல தெலுங்கு நடிகர் நானியின் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிகர் நானி. சமீபத்தில் வெளியான சரிபோதா சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது ஹிட் 3 படத்தில் நடித்துவருகிறார். இந்தப்படம் அடுத்தாண்டு வெளியாகவிருக்கிறது.

Advertisement

Advertisement

பூஜை புகைப்படம்.

இந்நிலையில் தசரா படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த ஒடேலா உடன் மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளார் நானி. தி பாரடைஸ் எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்தினை எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது.

இந்தப் போஸ்டரில் துப்பாக்கிகள், இரத்தம் அதிகமாக தென்படுகின்றன. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே நானியின் ஜெர்ஸி, கேங்ஸ்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நானியின் படங்களிலேயே அதிக பொருட்செலவில் இந்தப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments