ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சமரச பேச்சுக்கு நீதிமன்றம் உத்தரவு!
ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...
நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
செப். 9ஆம் தேதி தன் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில், சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்துள்ளார்.
Advertisement
Advertisement
இரண்டு நாள்களுக்குப் பிறகு ஜெயம் ரவியின் முடிவானது கலந்து ஆலோசிக்காமல் அவரே தன்னிச்சையாக எடுத்தது என்று ஆர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்
இதையும் படிக்க : சீனாவில் வெளியாகும் மகாராஜா!
இந்த நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், திருமணப் பதிவை ரத்து செய்யக் கோரிய ஜெயம் ரவியின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையை தொடர்ந்து, இருவரிடையே இன்றே சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இதனிடையே, பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவிக்கு தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில், அதனை ஜெயம் ரவி திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.