ஹன்ட்டர் வந்துட்டார்... வேட்டையன் 2-வது பாடல்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படம் என்கவுன்டரை மையப்படுத்தி உருவாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் பாடல்களும் வரவேற்பை அடைந்தது.
அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாவதால் படத்தின் புரமோஷன்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Advertisement
இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். 2 மணி நேரம் 47 நிமிடம் ரன்னிங் டைம் கொண்ட திரைப்படமாக வேட்டையன் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான ஹன்ட்டர் வந்துட்டார் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையமைத்த இப்பாடலை அறிவு எழுதியுள்ளார். சித்தார்த் பஸ்ருர் பாடியுள்ளார்.