பாலிவுட்டில் அறிமுகமாகும் மடோன் அஸ்வின்?
மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படம் குறித்து தகவல்...
இயக்குநர் மடோன் அஸ்வின் பாலிவுட்டில் திரைப்படம் இயக்கவுள்ளதாகத் தகவல்.
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் திரைத்துறைக்கு வந்தவர் இயக்குநர் மடோன் அஸ்வின். மண்டேலா படத்தின் மூலம் பெரிய கவனம் பெற்றார். அப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றார்.
இதையும் படிக்க: தேசிய விருதை யாருக்கு சமர்ப்பிக்கிறீர்கள்? மணிரத்னம் அசத்தல் பதில்!
Advertisement
Advertisement
தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் திரைப்படத்தை எடுத்தார். இப்படம், விமர்சன ரீதியாகவும் கவனம் பெற்றதுடன் ரூ. 90 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.
அடுத்ததாக, எந்த நடிகருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிப்பில் பாலிவுட்டில் மடோன் அஸ்வின் படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.