முகப்பு
செய்திகள்

துல்கர் சல்மான் படத்தில் எஸ். ஜே. சூர்யா!

துல்கர் சல்மானுடன் எஸ். ஜே. சூர்யா நடிக்கும் படத்தின் அப்டேட்...

Updated On : 14 அக்டோபர் 2024, 12:13 pm IST
துல்கர் சல்மான், எஸ். ஜே. சூர்யா.
பகிர்:

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் மலையாளப் படத்தில் நடிக்கிறார் எஸ். ஜே. சூர்யா.

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ். ஜே. சூர்யா தன் தனித்துவமான நடிப்பால் இந்தியளவில் கவனம் பெற்றுள்ளார். கதாநாயகனுக்கு இணையான காட்சிகள் உள்ள திரைப்படங்களையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்.

தற்போது, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவனின் எல்ஐசி, வீர தீர சூரன் படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்படமான ஆர்டிஎக்ஸ் திரைப்படத்தை இயக்கிய நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், நாயகனாக நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார். ஆக்சன் பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, ஃபஹத் ஃபாசில் நடிக்கும் மலையாளப் படமொன்றிலும் எஸ். ஜே. சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments