முகப்பு
செய்திகள்

ஆண்ட்ரியா குரலில் ஜாலியோ ஜிம்கானா படத்தின் பாடல்!

பிரபுதேவாவின் ஜாலியோ ஜிம்கானா படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

Updated On : 25 அக்டோபர் 2024, 5:43 pm IST
ஆண்ட்ரியா குரலில் ஜாலியோ ஜிம்கானா படத்தின் பாடல்.
பகிர்:

இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிப்பில், பேட்ட ராப் படம், உல்ஃப் என பல படங்கள் தயாராகி வருகின்றன.

பிஹைண்ட்வுட்ஸ் வழங்கும் இந்தத் திரைப்படத்தை, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மனோஜ் என்எஸ் இயக்கி வருகிறார்.

மூன் வாக் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

Advertisement

இயக்குநர் சக்தி சிதம்பரம் ஜாலியோ ஜிம்கானா படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரபு தேவா உடன் நாயகியாக நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். உடன் அபிராமி, யோகி பாபு நடித்துள்ளார்கள்.

டிரான்ஸ்இந்தியா மீடியா & என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்தப் படத்தின் டிரைலர் கவன்ம்பெற்றது.

கோட் படத்திலும் பிரபுதேவா நடித்திருந்தார். இந்நிலையில் ஆண்ட்ரியா குரலில் அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவாவுக்கு இது 3ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.