முகப்பு

இரண்டு வானம் படத்தின் புதிய பாடல் வெளியானது!

இரண்டு வானம் படத்தின் ஆத்தி என்னால முடியலையே பாடல் வெளியீடு குறித்து...

இரண்டு வானம் படத்தின் புதிய பாடல் வெளியானது!
இரண்டு வானம் படத்தின் புதிய பாடல். - படம்: விடியோ கிளிப்
பகிர்:

நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் அவரை வைத்தே இயக்கிய ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார்.

தற்போது, மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ள திரைப்படத்திற்கு, ‘இரண்டு வானம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் படம் கடந்த அக். 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

வாழ்க்கையில் உண்மையான அன்பு கிடைக்கும்போது, ஒரு மனிதருக்குள் எப்படியெல்லாம் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை மையமாகக் கொண்டு இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, இரண்டு வானம் படத்தின் ’வெள்ளிச்சுடரே’ பாடல் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது பாடலான ’ஆத்தி என்னால முடியலையே’ பாடல் வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலுக்கான வரிகளை லவர்தன் எழுத அந்தோணி தாசன், தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

summary

A new song from actor Vishnu Vishal's film *Irandu Vaanam* has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.