FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கருப்பர் வந்தா அய்யன் வருவார்... சூர்யா வெளியிட்ட மணிகண்டா படத்தின் முதல் பாடல்!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள மணிகண்டா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது பற்றி...

39 வினாடிகள் முன்பு
கருப்பர் வந்தா அய்யன் வருவார்... சூர்யா வெளியிட்ட மணிகண்டா படத்தின் முதல் பாடல்!
மணிகண்டா படத்தின் பாடல் போஸ்டர் - படம்: யூடியூப் / ஏபி இன்டர்நேஷ்னல்
பகிர்:

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள மணிகண்டா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. ஜேகே சரவணா எழுதிய இந்தப் பாடலை விஎம் மகாலிங்கம் பாடியுள்ளார்.

ஹிந்து மதக் கடவுளான ஐயப்பனை மையப்படுத்தி மணிகண்டா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் வைபவ் நாயகனாகவும் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளனர்.

இப்படத்தை ’மாளிகைபுரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ளார். தாந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான ’கருப்பர் வந்தா அய்யன் வருவார்' என்ற பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு பிரேம் ஜி அமரன் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை விஎம் மகாலிங்கம் பாடியுள்ளார். இந்தப் பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான கருப்பு படத்திலும் சாய் அபயங்கர் இசையில் கருப்பு பாடல் மிகவும் வைரலானது நினைவுகூரத்தக்கது.

இந்தப் படத்தில் ஆடுகளம் நரேன், அரவிந்த் ஆகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் பான் இந்திய படமாக வெளியாவதும் குறிப்பிடத்தக்கது.

summary

Manikanda first single, 'Karuppar Vandhaa Ayyan Varuvaar' is majestically devotional

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.