பாடகரானார் அபிஷன்! பிக்காசோ பட முதல் பாடல் வெளியீடு!
அபிஷன் ஜீவிந் நாயகனாக நடிக்கும் “பிக்காசோ” படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது...
அபிஷன் ஜீவிந் நாயகனாக நடித்துள்ள “பிக்காசோ” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
“டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந் நாயகனாக நடிக்கும் புதிய படம் “பிக்காசோ”. கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கியுள்ளார்.
நடிகர்கள் யோகலட்சுமி, கானா வினோத் மற்றும் ஷிவாணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு லியான் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பிக்காசோ படத்தின் “ஹக்குனாமாடாட்டா” எனும் முதல் பாடலை இன்று (நவ. 27) மாலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இத்துடன், தமிழ் ஆதவன் எழுதியுள்ள இந்தப் பாடலை, அபிஷன் ஜீவிந் பாடியுள்ளார். மேலும், இந்தப் பாடலை முன்னணி நடிகர் சூரி வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, அபிஷன் ஜீவிந் நாயகனாக நடித்து வெளியான “வித் லவ்” படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், நடிகர் சிவ ராஜ்குமாருடன் இணைந்து அபிஷன் நடித்துள்ள பிக்காசோ படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.