FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

11,500 திரைகளில் புஷ்பா - 2?

புஷ்பா - 2 வெளியீடு குறித்து....

Updated On : 26 அக்டோபர் 2024, 9:18 pm IST
பகிர்:

புஷ்பா - 2 திரைப்படம் அதிக திரைகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதுடன் ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. தற்போது, புஷ்பா - 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

Advertisement

Advertisement

ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் வருகிற டிச. 6 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மீண்டும் வெளியீட்டுத் தேதியை மாற்றியுள்ளனர். அதன்படி, டிச. 5 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், புஷ்பா - 2 திரைப்படத்தை உலகளவில் 11,500-க்கும் அதிகமான திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம். குறிப்பாக, இந்தியாவில் 6500 திரைகளிலும் வெளிநாடுகளில் 5000 திரைகளிலும் கொண்டு சேர்க்க புரமோஷன் பணிகளைத் தீவிரமாக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments