முகப்பு
செய்திகள்

பிக்பாஸ் - 8 தொகுப்பாளர் விஜய் சேதுபதி? புரமோஷன் படப்பிடிப்பு நிறைவு!

பிக்பாஸ் - 8 நிகழ்ச்சிக்கான முன்னோட்ட விடியோ படப்பிடிப்பு புதுச்சேரியில் சமீபத்தில் நிறைவு பெற்றது.

Updated On : 3 செப்டம்பர் 2024, 3:58 pm IST
பிக்பாஸ்
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் - 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலம் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவியது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

Advertisement

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸ் - 8 புரோமோ படப்பிடிப்பு

இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் - 8 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாக பிரபலங்களின் பெயர்கள் சமூக வலைதளத்தில் பரவின.

நடிகர் சரத்குமார், சிலம்பரசன், சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் பெயர்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதேபோன்று மூத்த நடிகை ரம்யா கிருஷ்ணன், நயன்தாரா ஆகியோரில் ஒருவர் தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது அந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கான முன்னோட்ட விடியோ புதுச்சேரியில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் விஜய் சேதுபதி கலந்துகொண்டதாகவும் கூறுகின்றனர். எனினும் விஜய் தொலைக்காட்சியின் முன்னோட்ட விடியோ வரும்வரை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் இணையவாசிகள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் மனநிலையை நுணுக்கமாகப் புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு ஏற்ப தனது கருத்துகளை முன்வைக்கவும் கமல்ஹாசனுக்கு நிகராக, விஜய் சேதுபதி சிறந்த நபர் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

எனினும், பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் சேதுபதியின் சினிமா பயணத்தில் பெரும் பின்னடைவாக இருக்கும் எனவும் சிலர் வாதங்களை முன்வைக்கின்றனர்.

இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments