நடிகர் வடிவேலுவின் பிறந்த நாள்: மாரீசன் பட போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து!
நடிகர் வடிவேலுவின் பிறந்த நாள்: மாரீசன் பட போஸ்டர் வெளியீடு!
உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது 64-ஆவது பிறந்தநாளை இன்று(செப்.12) கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வடிவேலு நடிப்பில் புதிதாக மாரீசன்’ என்ற் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘மாரீசன்’ திரைப்படக் குழு அவரது போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.