ரூ.4 கோடி மதிப்பில் புதிய கார் வாங்கிய அஜித்!
நடிகர் அஜித் குமார் மீண்டும் புதிய கார் ஒன்றினை வாங்கியுள்ளார்.
துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார்.
கார், பைக்குகள் மீது தீவிர ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: வங்கிக் கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வந்துவிட்டது..! துயரத்தைப் பகிர்ந்த 96 பட இயக்குநர்!
சமீபத்தில் அஜித் பிறந்தநாளுக்கு அவரது மனைவி ஷாலினி டுகாட்டி வகை இருசக்கர வாகனத்தைப் பரிசளித்தார்.
கடந்த ஜூலை மாதம் தான் ரூ. 9 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் ஒன்றினை வாங்கினார்.
இதையும் படிக்க: விஜய் படம் கைவிடப்பட்டது ஏன்? பதிலளித்த இயக்குநர் சசிகுமார்!
இந்நிலையில், போர்ஷே ஜிடி3 வகை கார் வாங்கியுள்ளார் அஜித். இந்தக் காரின் விலை சுமார் ரூ.4 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அஜித் குமார் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.