விஜய் 69: ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் விஜய்யின் 69ஆவது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் கடந்த வாரம் வியாழக்கிழமை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
அந்தப் படம் திரைகளில் வெளியாகி முதல் நான்கு நாள்களில், ரூ. 288 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசி திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகுமென படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.