முகப்பு
செய்திகள்

கடன் பிரச்னையால் படங்கள் இயக்கவில்லை...! இயக்குநர் சசிகுமார் பகிர்ந்த துயரக் கதை!

இயக்குநர் சசிகுமார் தான் படங்கள் இயக்காதது ஏனென நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

Updated On : 17 செப்டம்பர் 2024, 4:23 pm IST
இயக்குநர் சசிகுமார்
பகிர்:

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. 

சுப்ரமணியபுரத்துக்குப் பின் ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.

வெற்றி, தோல்வியென சென்ற அவர் நடிப்பு வாழ்க்கையில் இறுதியாக வெளியான ‘அயோத்தி’ ’கருடன்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

Advertisement

நந்தன் புரமோஷன்

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படம் செப்.20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுருதி பெரியசாமி நாயகியாக நடித்துள்ளார்.

இதற்கான புரமோஷன் பணிகளில் சசிகுமார் பங்கேற்று வருகிறார். இது தொடர்பான நேர்காணல் ஒன்றில் சசிகுமார் பேசியதாவது:

கடன் பிரச்னையால் இயக்கவில்லை

எனக்கு அதிகமான கடன்கள் இருந்தன. ஈசனுக்குப் பிறகு ஒரு வரலாற்று படத்தை இயக்கவிருந்தேன். எனது கடன் அதிகமானதால் என்னால் இயக்குநராக தொடர முடியவில்லை. ஏனெனில் இயக்குநராக சென்றால் 1-2 வருடம் அதிலேயே சென்றுவிடும். அதனால்தான் நடிப்பில் கவனம் செலுத்தினேன்.

இபோதுதான் எனக்குப் பிடித்த படங்களிலேயே நடிக்கிறேன். இதற்கு முன்புவரை கடன் செலவுக்காக நடித்துவந்தேன். அயோத்தி, கருடன், நந்தன் படங்களெல்லாம் பிடித்து நடித்தேன். முன்புவரை யாருக்காகவோ நடித்து வந்தேன்.

ஆனால், நான் காலத்தை வீணாக்கவில்லை. என்னிடம் 3-4 கதைகள் தயாராக இருக்கின்றன. சில தயாரிப்பாளர்கள் உடனடியாக என்னுடைய படங்களை தயாரிக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், நான் சில படங்களில் நடிக்க ஒப்புதல் அளித்திருக்கிறேன். அதனால், சிறிது அவகாசம் கேட்டுள்ளேன். அது முடிந்ததும் இயக்குநராக மீண்டும் வருவேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.