பேட்ட ராப் பட போஸ்டர்.  
செய்திகள்

பேட்ட ராப் பாடல் ரீமிக்ஸ்..! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குநராக இருந்து நடிகராக, இயக்குநராக பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வந்தவர் பிரபு தேவா. சமீப காலமாக படங்களை இயக்குவதை விடுத்து நாயகனாக நடித்து வருகிறார்.

தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பஹிரா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

சமீபத்தில் வெளியான விஜய்யின் கோட் படத்திலும் நடித்திருந்தார். அதேநேரம், நாயகனாக பேட்ட ராப் மற்றும் மூன் வாக் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இதில், பேட்ட ராப் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதால் படத்தின் டீசரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். எஸ்ஜே சினு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வேதிகா நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் பேட்ட ராப் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் படம் வரும் செப். 27ஆம் தேதி வெளியாகுமெனவும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை: கே.ஏ.செங்கோட்டையன்!

மருதமலையில் 500 மீட்டா் சுற்றளவுக்குள் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

தேசிய ஊரக வேலை சட்ட விவகாரம்: காங்கிரஸ் தலைவா்கள் போராட்டம்

சந்திர கிரகணம்: மாா்ச் 3-ஆம் தேதி ஏழுமலையான் கோயில் மூடல்

இன்றைய மின் தடை-குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி!

SCROLL FOR NEXT