முகப்பு
செய்திகள்

சிக்கந்தரால் எஸ்கே - 23 படப்பிடிப்பு பாதிப்பு?

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தின் அப்டேட்...

Updated On : 19 செப்டம்பர், 2024 at 12:30 PM
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் - நடிகர் சிவகார்த்திகேயன்.
பகிர்:

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாகத் தகவல்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் மற்றும் பிஜு மேனன் இணைந்துள்ளனர்.

படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, திடீரென நடிகர் சல்மான் கானின் புதிய படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இதனால், எஸ்கே - 23 படப்பிடிப்பு முடிந்திருக்கலாம் என கூறப்பட்டது.

ஆனால், அப்படப்பிடிப்பின்போதே ஏ. ஆர். முருகதாஸ் மும்பை சென்று சல்மான் கானுடனான ’சிக்கந்தர்’ படப்பிடிப்பை துவங்கினார். சிக்கந்தர் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் எஸ்கே - 23 படத்தை இயக்குவார் என படக்குழுவினர் காத்திருக்கின்றனர். ஆனால், முழுப்படத்தையும் முடித்தபின்பே முருகதாஸ் சென்னை திரும்பும் திட்டத்தில் இருக்கிறாராம்.

சல்மான் கானுடன் ஏ.ஆர். முருகதாஸ்

75 % படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த திடீர் சிக்கந்தர் பிரச்னையால் எஸ்கே - 23 படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நடிகர் சிவகார்த்திகேயன் கடும் அதிருப்தி அடைந்துள்ளாராம்!

முழு கட்டுரையைப் படிக்க →