முகப்பு
செய்திகள்

பிரபு தேவாவின் பேட்ட ராப் டிரைலர்!

நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட ராப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 20 செப்டம்பர் 2024, 5:58 pm IST
பேட்ட ராப் போஸ்டர்.
பகிர்:

நடன இயக்குநராக இருந்து நடிகராக, இயக்குநராக பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வந்தவர் பிரபு தேவா. சமீப காலமாக படங்களை இயக்குவதை விடுத்து நாயகனாக நடித்து வருகிறார்.

தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பஹிரா ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

சமீபத்தில் வெளியான விஜய்யின் கோட் படத்திலும் நடித்திருந்தார். அதேநேரம், நாயகனாக பேட்ட ராப் மற்றும் மூன் வாக் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

Advertisement

இதில், பேட்ட ராப் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதால் படத்தின் டீசரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். எஸ்ஜே சினு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வேதிகா நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் பேட்ட ராப் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் படம் வரும் செப். 27ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி, ரியாஸ் கான் உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.