முகப்பு
செய்திகள்

வேட்டையன் டிரைலர் எப்போது?

வேட்டையன் டிரைலர் குறித்து...

Updated On : 26 செப்டம்பர் 2024, 1:39 pm IST
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படத்தின் டிரைலர் குறித்து தகவல்.

ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா தயாரித்த இப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

லால் சலாம், இந்தியன் - 2 படங்களின் தோல்வியால் லைகா நிறுவனம் நிதி நெருக்கடியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. வேட்டையன் படத்தின் வெற்றியைப் பொறுத்தே விடாமுயற்சியின் நிலை தெரிய வரும்.

Advertisement

Advertisement

சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தின் டீசரில் நடிகர் ரஜினிகாந்த், “ என்கவுன்டர் என்பது குற்றம் செய்வதர்களுக்கு கொடுக்கும் தண்டனை மட்டுமல்ல.. இனிமேல் இதுபோல் நடக்கக் கூடாது என்பதற்காக எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்கிற வசனத்தைப் பேசியுள்ளார்.

இதனால், வேட்டையன் திரைப்படம் என்கவுன்டரை நியாயப்படுத்தும் படமாக உருவாகியிருப்பதாகவே பலரும் கருதுகின்றனர்.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் வருகிற அக. 2 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.