35 படத்தின் போஸ்டர்.  
செய்திகள்

நிவேதா தாமஸின் 35: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியான 35 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர்.

முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக சாகினி டாகினி (தெலுங்கு), எந்தாடா சஜி (மலையாளம்) நல்ல வரவேற்பைப் பெற்றன.

’35 சின்ன விஷயம் இல்ல’ என்ற இப்படத்தினை சுரேஷ் புரடக்‌ஷன்ஸ் உடன் மற்ற 2 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க நந்த கிஷோர் ஏமானி இயக்கியுள்ளார்.

நடிகர் ராணா டகுபதி இந்தப் படத்தினை வெளியிட்டார். கௌதமி, பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படம் செப்.6ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, ஆஹா ஓடிடியில் அக்.2ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT