முகப்பு
செய்திகள்

கமல்ஹாசன் - அட்லி - சல்மான் கான் கூட்டணி?

அட்லி புதிய திரைப்படம் குறித்து தகவல்...

Updated On : 30 செப்டம்பர், 2024 at 6:06 AM
கமல்ஹாசன் - அட்லி - சல்மான் கான். - புகைப்பட உதவி: எக்ஸ்
பகிர்:

இயக்குநர் அட்லி நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளதாகத் தகவல்.

ஜவான் வெற்றிக்குப் பின் இயக்குநர் அட்லி புதிய படத்தில் இன்னும் ஒப்பந்தமாகவில்லை. காரணம், ஜவான் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் அடுத்து மிகப்பெரிய பட்ஜெட் படமொன்றை எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

இதனால், அதற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, நடிகர் அல்லு அர்ஜுன் - அட்லி கூட்டணி இணைந்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், அப்படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

தொடர்ந்து, இயக்குநர் அட்லி நடிகர் சல்மான் கானை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், அட்லியின் புதிய படம் உறுதிசெய்யப்பட்டதாகவும் இதில் நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான் இணைந்து நடிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம். விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

தற்போது, நடிகர் சல்மான் கான் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘சிக்கந்தர்’ படத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments