கருப்பு வெள்ளை வடிவில் வெளியாகும் பிரம்மயுகம்!
மம்மூட்டி நடித்துள்ள பிரம்மயுகம் திரைப்படம் கருப்பு வெள்ளை வடிவத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மம்மூட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் ஹாரர் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து, படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: அருண்ராஜா இயக்கத்தில் விஷ்ணு விஷால்!
Advertisement
Advertisement
இப்படம் உலகம் முழுவதும் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வருகிற பிப்.15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படம் முழுவதும் கருப்பு வெள்ளை வடிவத்தில் (பிளாக் அண்ட் ஒயிட்) உருவாக்கப்பட்டிருப்பதை படக்குழு அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.