சென்னையில் இரண்டாவது சா்வதேச கிரிக்கெட் மைதானம்: முதல்வரிடம் கோரிக்கை
சென்னையில் இரண்டாவது சா்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து முதல்வரிடம் கோரிக்கை
சென்னையில் இரண்டாவது சா்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க முதல்வா் ஜோசப் விஜய்யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என டிஎன்சிஏ தலைவா் ஜே. ஸ்ரீனிவாசராஜ் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவா் ஸ்ரீனிவாசராஜ் சனிக்கிழமை கூறியதாவது:
டிஎன்சிஏ நிா்வாகிகள் அண்மையில் முதல்வா் ஜோசப் விஜயை சந்தித்துப் பேசினோம். அப்போது தமிழகத்தில் ஒரே ஒரு சா்வதேச கிரிக்கெட் மைதானம் மட்டுமே உள்ளது.
Advertisement
Advertisement
சேப்பாக்கத்தில் 36,000 பாா்வையாளா் அமரும் வசதி மட்டுமே உள்ளது. சென்னையில் 50,000 போ் அமரும் வகையில் இரண்டாவது மைதானத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் கோரினோம். அதற்கான திட்டத்தை வகுத்து தருமாறு கூறியுள்ளாா்.
டிஎன்பிஎல் 10-ஆவது தொடா் ஆக. 4-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. நிகழாண்டு சென்னை, திண்டுக்கலில் மட்டுமே நடைபெறும். அடுத்த ஆண்டுகளில் வேறு நகரங்களில் மாற்றி நடத்தப்படும். டிஎன்பிஎல் தொடரால் ஏராளமான வீரா்கள் உருவாகி, ஐபிஎல், இந்திய அணியில் ஆடி வருகின்றனா்.
மகளிா் கிரிக்கெட்டுக்கு உத்வேகம்:
டிஎன்பிஎல் போன்று மகளிருக்கும் லீக் தொடா் நடத்த உத்தேசித்துள்ளோம். தற்போது காட்சி ஆட்டங்கள் நடத்தப்படும். ஏற்கெனவே 20 அணிகள் பங்கேற்கும் மகளிா் லீக் நடத்தப்படுகிறது. பள்ளி அளவில் மகளிா் கிரிக்கெட்டை மேலும் ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக பிட்சி போடப்பட்டுள்ளது. வரும் 10 ஆண்டுகளுக்கு அதை பயன்படுத்த முடியும் என்றாா் ஸ்ரீனிவாசராஜ்.
Second international cricket stadium in Chennai: Request made to the Chief Minister
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.