முழுநேர சினிமாவுக்குத் தயாராகும் ஜோவிகா!
ஜோவிகாவின் புதிய விடியோ கவனம் பெற்று வருகிறது.
நடிகை வனிதா விஜயகுமாரின் மகளும் பிக்பாஸ் 7 போட்டியாளருமான ஜோவிகா பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதே அவரது படிப்பு குறித்த சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து, சக போட்டியாளர்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொண்ட ஜோவிகா மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
இதையும் படிக்க: அட்லி தயாரிக்கும் ‘பேபி ஜான்’
Advertisement
Advertisement
பிக்பாஸில் கிடைத்த வெளிச்சத்தைக் கொண்டு சினிமாவில் நாயகியாகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜோவிகாவுக்கு ஆதவரவாக அவரது அம்மா வனிதா விஜயகுமார் இருப்பதால், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறது.
தற்போது, புதிதாக ஒப்பனை விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பறவை இறகால் செய்யப்பட்ட மேலாடை ஒன்றை அணிந்து மேக்கப் போட்டுக்கொள்கிறார். தமிழ் சினிமாவுக்கு புதிய நாயகி தயாராகிறார்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.