சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்?
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாகத் தகவல்.
ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரும் இயக்குநர்களாக உள்ளனர். சினிமாவில் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து படங்களை இயக்கியும் வருகின்றனர். ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து இணையத் தொடர் ஒன்றை தயாரிக்கிறார். நோவா ஆபிரஹாம் இயக்கத்தில் உருவாகும் இத்தொடருக்கு கேங்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: முழுநேர சினிமாவுக்குத் தயாராகும் ஜோவிகா!
Advertisement
Advertisement
த்தொடரில் நாயகனாக நடிகர் அசோக் செல்வன் நடித்துள்ளார். இந்நிலையில், சௌந்தர்யா நடிகர் ராகவா லாரன்ஸை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.