முகப்பு
செய்திகள்

தென்னிந்திய ஆலியா பட்: ரசிகர்களின் அன்பு மழையில் கன்னட நடிகை! 

கன்னட நடிகையை தென்னிந்தியாவின் ஆலியா பட் என தமிழ் ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். 

Updated On : 9 பிப்ரவரி 2024, 2:23 pm IST
பகிர்:

சமீபத்தில் கன்னடத்தில் சப்த சாகரதாச்சே எல்லோ- சைடு ஏ, சைடு பி என இரண்டு பாகங்களாக திரையரங்குகளில் வெளியான படம் நல்ல வரவேற்பினை பெற்றன. 

தொடர்ந்து ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பின் இந்திய அளவில் இப்படம் கவனம் ஈர்த்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கத்தில் சிவராஜ் குமார் இணைந்து நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த சைடு பி படத்தில் சுரபி கதாபாத்திரத்தில் நடித்த கன்னட நடிகை சைத்ரா ஜே. ஆச்சார் எனும் நடிகை கன்னட, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் கவனம் பெற்று வருகிறார். குறிப்பாக தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தென்னிந்தியாவின் ஆலியா பட் என வர்ணித்து வருகிறார்கள். 

படத்தில் பாலியல் தொழிலாளாரக நடித்து அசத்தியிருப்பார். சோகம் கவியும் முகம், சிரிப்பு, கோபம் என நடிப்பில் அசத்தியிருந்தார். இறுதிக் காட்சியில் அவர் மருத்துவ புத்தகங்களை கையில் எடுக்கும்போது பலருக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது. 

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் கங்குபாய் கதியவாடி படத்தில் அட்டகாசமாக நடித்து தேசிய விருதினைப் பெற்றார். இவரது முகச்சாயலும் நடிப்பிலும் அசத்தியுள்ள கன்னட நடிகையை தமிழ் ரசிகர்கள் தென்னிந்திய ஆலியா பட் என புகழ்ந்து வருகிறார்கள். 

நடிப்பு மட்டுமல்ல பாடகராகவும் அசத்திவருகிறார்  சைத்ரா ஜே. ஆச்சார். தற்போது பிலிங்க், ஸ்ட்ராபெர்ரி, ஹேப்பி பர்த்டே டூ மீ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாகவிருக்கின்றன. 

நல்ல படங்களை தமிழ் ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள். பிரேமம் படத்தினை மலையாளத்தினை விட தமிழில் அதிகம் ரசித்தார்கள். பின்னர் வந்த தயா எனும் கன்னட படத்தினையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments