கேப்டன் மில்லர் தீயாக இருக்கிறது: ஜி.வி.பிரகாஷ்
கேப்டன் மில்லர் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.
தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் வருகிற 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: வைரலாகும் விஜய்யின் தோற்றம்!
Advertisement
Advertisement
சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் எக்ஸ் தளத்தில், “ பின்னணி இசையும் இசைக் கலப்பு (மிக்சிங்) பணியும் முடிந்தது. கேப்டன் மில்லர் தீயாக இருக்கிறது. தனுஷுக்கான அறிமுக இசைக்குக் காத்திருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். இது தனுஷ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.