முகப்பு
செய்திகள்

ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சச்சின்!

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்துடன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Updated On : 23 ஜனவரி 2024, 12:39 pm IST
ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சச்சின்
பகிர்:

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்துடன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமரின் சிலை நேற்று நண்பகல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பூஜையில், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

தமிழகத்தில் இருந்து நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திர அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினியுடன், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், பாடகர் சங்கர் மகாதேவன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments