FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

திரைப்பட விழாவில் பங்கேற்பதால் இது தீவிரமான படமில்லை: இயக்குநர் ராம்

ஏழு கடல் ஏழு மலை படம் குறித்து படக்குழுவினர் பகிர்ந்த சுவாரசிய தகவல்..

Updated On : 31 ஜனவரி 2024, 9:11 pm IST
பகிர்:

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி நடிகை அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’.

காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று வருகிறது. 

இந்நிலையில் இன்று ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றது குறித்து படக்குழுவினர் ஜாலியாக பேசியது வைரலாகி வருகிறது. 

படம் குறித்து இயக்குநர் ராம், “திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதால் இந்தப் படம் சீரியஸான (தீவிரமான ) படமில்லை. முழுக்க முழ்க்க கமர்ஷியல் படம்தான். நம்பிக்கை இல்லையென்றால் இவர்களே (சூரி, நிவின்பாலி, அஞ்சலி) சாட்சி. படம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும்” எனக் கூறினார். 

இயக்குநர் ராம் பேசும்போது அஞ்சலி, “ஆமாம், இது கமர்ஷியல் கமர்ஷியல் கமர்ஷியல் படம்” என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments