பெருசு - ஓடிடி வெளியீட்டுத் தேதி!
பெருசு படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.
பெருசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கிய திரைப்படம் பெருசு. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் வைபவ் நாயகனாகவும் சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.
மரணப்படுக்கையில் இருக்கும் குடும்பப் பெரியவரின் இறப்பில் நேரும் ஒரு சம்பவம் பற்றிய துயர நகைச்சுவைக் கதையாக ’அடல்ட் காமெடி’ பாணியில் பெருசு படம் உருவாகியிருந்தது.
Advertisement
Advertisement
இந்தப் படம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், வணிக ரீதியாக படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
இந்த நிலையில், பெருசு திரைப்படம் வருகிற ஏப். 11 அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.