முகப்பு
செய்திகள்

சிம்பு - 49 படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

சிம்பு - 49 படம் குறித்து...

Updated On : 14 ஏப்ரல், 2025 at 6:27 AM
பகிர்:

நடிகர் சிம்புவின் 49-வது படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

‘கட்சி சேர’, ‘ஆச கூட’, 'சித்திர புத்திரி’ ஆல்பம் பாடல்களால் இசையமைப்பாளராக, பாடகராகக் கவனிக்கப்பட்ட சாய் அபயங்கர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் பென்ஸ், சூர்யா - 45, பிரதீப் ரங்கநாதன் படம் என அடுத்தடுத்து மூன்று படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி கவனம் ஈர்த்தார்.

இதைவிட, இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் படத்திற்கும் சாய் இசையமைக்க உள்ளது ஆச்சரியம் அளித்தது.

இந்த நிலையில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் சிம்புவின் 49-வது படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார்.

தன் இசையமைப்பில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களில் சாய் அபயங்கர் ஒப்பந்தமாகி வருவது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →