வீர தீர சூரன் போஸ்டர்.  
செய்திகள்

வீர தீர சூரன் ஓடிடி ரிலீஸ் தேதி!

விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் இரண்டாவது பாகம் கடந்த மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் நடித்துள்ளார்கள்.

ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவான இந்தப் படம் நிதி பிரச்னையால் வெளியான அன்று முதல் 2 காட்சிகள் திரையிடப்படாமல் முதல் காட்சி மாலை 4 மணிக்குதான் வெளியானது.

அதிரடியான ஆக்சன் படமாக உருவாகியிருந்த வீர தீர சூரன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தீர சூரன் திரைப்படம் ஒரு வார முடிவில் ரூ. 52 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வீர தீர சூரன் -2 ஏப்.24ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழப்பாவூரில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் கூட்டம்!

பெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்குப் பாராட்டு!

வீடு புகுந்து நகைகள் திருட்டு

ஆடி பெளா்ணமி சுவாமிமலையில் கிரிவலம்

தோல்வி பயத்தால் தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: ஜி.கே. வாசன்

SCROLL FOR NEXT