FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மாமன் மேக்கிங் விடியோ!

நடிகர் சூரி நடித்துள்ள மாமன் படத்தின் மேக்கிங் விடியோ வெளியானது.

Updated On : 22 ஏப்ரல் 2025, 9:50 pm IST
மாமன் மேக்கிங் விடியோ காட்சிகள். - படம்: எக்ஸ் / திங்க் மியூசிக்
பகிர்:

நடிகர் சூரி நடித்துள்ள மாமன் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் விடியோ வெளியானது.

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.

லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மாமன்’ எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று முடிந்தது. இப்படம் வருகிற மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

சூரி அடுத்ததாக மண்டாடி எனும் படத்தில் நடித்துள்ளார். இதன் முதல்பார்வை போஸ்டர் சமீபத்தில் வைரலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments