அனிருத் குரலில் ‘கிஸ்’ படத்தின் முதல் பாடல்!
’கிஸ்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளதைப் பற்றி...
நடிகர் கவின் நடித்துள்ள புதிய திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
சின்ன திரை மூலம் பிரபலமாகி வெள்ளித் திரையில் கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் கவின். பிக் பாஸ் மூலம் மற்றொரு பரிமாணத்தை அடைந்த அவர், அதன் பின்னர் நடித்த லிஃப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில், அவர் நடித்து வெளியான ’ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் தயாரித்திருந்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஓடிடி-யில் வெளியான பின்பு மிகுந்த வரவேற்பை பெற்றது.
Advertisement
Advertisement
இந்நிலையில், தற்போது நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோரின் நடிப்பில் ‘கிஸ்’ எனும் புதிய படம் உருவாகி வருகின்றது.
ஜென் மார்டின் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ’திருடி’ எனும் முதல் பாடலான பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். இந்தப் பாடலின் மியூசிக் விடியோ இன்று (ஏப்.30) படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆஷிக் ஏ.ஆர். -ன் பாடல் வரிகளில் மென்மையான காதல் பாடலான ‘திருடி’ ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்பை அதிகரித்துள்ளது.
வின் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் ‘மாஸ்க்’ எனும் மற்றொரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எஸ்டிஆர் 49! மீண்டும் சிம்பு - சந்தானம் கூட்டணி!