ஜப்பானில் வெளியாகும் புஷ்பா - 2! புதிய டிரைலர் வெளியீடு!
நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா - 2’ திரைப்படம் ஜப்பானிய மொழியில் வெளியாவது குறித்து...
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான “புஷ்பா 2: தி ரூல்” திரைப்படத்தின் ஜப்பானிய மொழி டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் - இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகி கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான “புஷ்பா 2: தி ரூல்” திரைப்படம் ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில், நடிகர்கள் ஃபகத் ஃபாசில், ரஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் வரும் 2026 ஜன.16 ஆம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கீக் பிக்சர்ஸ் இந்தியா நிறுவனம் விநியோகிக்கும் இந்தப் படத்தின் ஜப்பானிய மொழி டிரைலரை படக்குழு இன்று (டிச. 3) வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: தனுஷா, ஸ்ரேயஸா? மறைமுகமாக பதிலளித்த மிருணாள் தாக்கூர்!
The Japanese trailer of the movie “Pushpa 2: The Rule”, starring actor Allu Arjun, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.