நோரா ஃபதேகி 
செய்திகள்

எத்தனை பேரு.... ஜெயிலர் - 2 படத்தில் நோரா ஃபதேகி!

ஜெயிலர் - 2 படத்தில் நடிகை நோரா ஃபதேகி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஜெயிலர் - 2 திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் நெல்சன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் ஜெயிலர் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், நடிகர்கள் ஷாருக்கான், மோகன்லால், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், காவாலா 2.0 என்கிற பாடலுக்கு நடனமாட பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபதேகியை அழைத்துள்ளாகளாம். ஃபதேகியும் ஒகே சொல்லிவிட்டதால் விரைவில் படப்பிடிப்பில் இணையலாம் எனத் தெரிகிறது.

நடிகை நோரா ஃபதேகி

ஏற்கனவெ, பல நட்சத்திர நடிகர்களை ஜெயிலர் - 2 கதைக்குள் கொண்டு வந்த நிலையில், தற்போது நோரா ஃபதேகியும் இணைந்த தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

actor nora fatehi in jailer 2 movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியுடன் சச்சின் சந்திப்பு!

ஷுப்மன் கில் தொடரில் இருந்து விலகல்..! அணியில் இணையும் சஞ்சு சாம்சன்!

முக்கியத்துவம் பெறும் பிரதமர் மோடியின் ஓமன் பயணம்! காரணம் இதுதான்..!

ஜன நாயகன் பட 2வது பாடல் முன்னோட்ட விடியோ!

சிஎஸ்கே யாரையெல்லாம் எடுக்க திட்டமிட்டிருந்தது? வெளியானது போஸ்டர்கள், விடியோக்கள்!

SCROLL FOR NEXT