அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விருந்தில் நடிகை மல்லிகா ஷெராவத் பங்கேற்பு...
வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த கிறிஸ்துமஸ் விருந்தில் பங்கேற்க பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று (டிச. 18) இரவு விருந்தளித்தார்.
இந்த விருந்தில், பங்கேற்க பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து, அந்த அழைப்பை ஏற்று விருந்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை மல்லிகா பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், “வெள்ளை மாளிகையின் விருந்துக்கு அழைக்கப்பட்டது முற்றிலும் நம்ப முடியாத ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சியில் வெள்ளை மாளிகையின் விருந்தில் நடிகை மல்லிகா ஷெராவத் அழைப்பின் அடிப்படையில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!
Bollywood actress Mallika Sherawat has been invited to attend the Christmas party hosted by US President Donald Trump at the White House.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.