செய்திகள்

ரிவால்வர் ரீட்டா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ரிவால்வர் ரீட்டா ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படம், தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் கடந்த நவ. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜேகே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

ராதிகா சரத்குமார், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ரிவால்வர் ரீட்டா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் டிச. 26 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The OTT release date for actress Keerthy Suresh's film 'Revolver Rita' has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பா. இரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றோர்... பாராட்டுகளைப் பெறும் சரத்குமார்!

நகரங்களிலும் கிராமங்களிலும் முன்னணியில் இருக்கும் சீரியல்!

காஷ்மீர் சிறுமிக்கு ஸ்மிருதி மந்தனாவின் நெகிழ்ச்சியான செயல்!

விஜய்யை அரசியல்வாதியாக நான் ஏற்றுக்கொள்ளவில்லை: சரத்குமார்

மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை! கலக்கத்தில் மக்கள்!!

SCROLL FOR NEXT