பிக் பாஸ் 9: இறுதிக்கட்டத்தை நோக்கி! இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரமும் இருவர் வெளியேறியுள்ளனர்.
பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரமும் இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 13 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 21 நாள்களே உள்ளதால், போட்டியாளர்கள் முனைப்புடன் விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்திருந்தனர். குடும்ப உறுப்பினர்கள் போட்டியாளர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி ஊக்கப்படுத்தி சென்றனர்.
Advertisement
Advertisement
இந்த வாரம் கமுருதீன் வீட்டின் தலைவராக இருந்ததனால் அவரை யாரும் நாமினேட் செய்யவில்லை. அவரைத்தவிர மற்றவர்களை போட்டியாளர்கள் நாமினினேட் செய்தனர்.
அந்த வகையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு விஜே பார்வதி, கானா வினோத், அரோரா, விக்கல்ஸ் விக்ரம், அமித் பார்கவ், கனி திரு, திவ்யா கணேஷ், சான்ட்ரா, சுபிக்ஷா, சபரிநாதன் ஆகியோரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்தனர்.
இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மக்கள் வாக்களித்தனர், இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற இருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, அமித் பாகவ், கனி திரு ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்றைய நிகழ்ச்சியில் அமித் பார்கவ் வெளியேறியது காண்பிக்கப்பட்ட நிலையில், இன்றிரவு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கனி திரு வெளியேறுவது காண்பிக்கப்படும்.
இதுவரை நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி, ப்ரஜின், ரம்யா ஜோ, வியானா, எஃப்ஜே, ஆதிரை ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போது, பிக் பாஸ் வீட்டில் 9 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Two contestants have been eliminated from the Bigg Boss - 9 show this week as well.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.