முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் 9 : கனி வெளியேறிய நாளை வாழ்வில் மறக்கமாட்டேன் - விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து கனி திரு வெளியேற்றப்பட்ட நாளை மறக்கமாட்டேன் என விஜே பார்வதி தெரிவித்துள்ளது குறித்து...

Updated On : 29 டிசம்பர் 2025, 6:03 pm IST
சான்ட்ரா, விஜே பார்வதி / கனி திரு - படம் - எக்ஸ்
பகிர்:

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து கனி திரு வெளியேற்றப்பட்ட நாளை மறக்கமாட்டேன் என விஜே பார்வதி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தன் மீது வன்மம் உள்ளதாகவும், அனைவரையும் தனக்கு எதிராக முன்னிறுத்திய குழுவின் தலைவராக கனி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 13 வது வாரத்தை எட்டியுள்ளது. வார இறுதி நாளான சனிக்கிழமை அமித் பார்கவ் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கனி திரு வெளியேற்றப்பட்டார்.

Advertisement

Advertisement

கடந்த சில வாரங்களாக ஆட்டத்தில் முன்னேற்றத்தைக் கொண்டிருந்த கனி திரு வெளியேறியது அதிர்ச்சி அளிப்பதாக சக போட்டியாளர்களான விக்கல்ஸ் விக்ரம், சுபிக்‌ஷா உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் அன்பு நீடித்திருந்ததற்கும், மகிழ்ச்சி, நேர்மறை எண்ணங்கள் இருந்ததற்கும் கனி திரு முக்கிய காரணம் எனவும் சக போட்டியாளர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், கனி திரு வெளியேறிய இந்த நாளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன் என சான்ட்ராவிடம் விஜே பார்வதி கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் உள்ள 9 போட்டியாளர்களில் சான்ட்ராவை தவிர அனைவரும் தனக்கு எதிரான வன்மத்துடன் இருந்ததாகவும், ஒரே அணியாகச் செயல்பட்டதாகவும் விமர்சித்தார்.

கனி திரு தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதைப்போன்று சான்ட்ராவுடன் விஜே பார்வதி பேசிக்கொண்டிருந்தார். சான்ட்ராவும் பார்வதியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளை முன்வைத்தார்.

இதோடுமட்டுமின்றி கனி வெளியேறும்போது, விக்கல்ஸ் விக்ரம், சபரிநாதன் ஆகியோர் கண்கலங்கி அழுததையும் விஜே பார்வதி குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் பலர் விஜே பார்வதியை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

summary

bigg boss 9 tamil vj parvathy sandra about kani elimination vijay sethupathi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments