டிமான்டி காலனி - 3 அப்டேட்!
டிமான்டி காலனி - 3 படத்தின் அப்டேட்....
டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.
விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான டிமான்டி காலனி 2 திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வணிக ரீதியாக ரூ. 80 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.
தற்போது, இப்படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை (ஜன. 1) காலை 11.11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.