டிராகன் டிரைலர்!
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் டிரைலர்...
பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். லவ் டுடே மூலம் பிரபலமடைந்த பிரதீப் ரங்கநாதன் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க கல்லூரி காதல் கதையாக உருவான இதில் நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் பிரதான வேடங்களி்லும் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கிஸ் டீசர் தேதி!
டிராகன் திரைப்படம் பிப். 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். இதில், கல்லூரியில் ஒழுங்காக படிக்காமல் சொல்பேச்சு கேட்காத மாணவராக பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.