ஜி.டி. நாயுடு படத்தின் பெயர் போஸ்டர் வெளியீடு!
ஜி.டி. நாயுடு படத்தின் போஸ்டர்...
நடிகர் மாதவன் நடிக்கும் மறைந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
நடிகர் மாதவன் ராக்கெட்ரி படத்தின் வெற்றிக்குப் பின் சைத்தான் படத்தில் நடித்தார். இப்படமும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. இதுபோக, இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது, மறைந்த ஆராய்ச்சியாளரும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடிக்க உள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநரான ஷங்கர் மகன்!
ராக்கெட்ரி படத்தை தயாரித்த டிரை கலர்ஸ் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கின்றனர். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் துவங்கியுள்ளது.
இப்படத்திற்கு ஜி.டி.என் என பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும், இந்திய படப்பிடிப்பு துவங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ஜெயராம், பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.