முகப்பு
செய்திகள்

நானியின் ஹிட் - 3 டீசர்!

ஹிட் - 3 டீசர் வெளியானது...

Updated On : 24 பிப்ரவரி 2025, 12:31 pm IST
பகிர்:

நடிகர் நானி நடித்துள்ள ஹிட் - 3 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இறுதியாக வெளியான ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

Advertisement

Advertisement

தற்போது, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நானி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, நானி ஹிட் - 3 திரைப்படத்தில் நடித்து முடித்தார். வால் போஸ்டர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை சைலேஷ் கொலனு இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகியுள்ளது.

இந்த நிலையில், இன்று ஹிட் - 3 டீசரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்ற அதிரடி ஆக்சன் காட்சிகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments